திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியல்
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றப் புலனாய்வு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 1...


பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக திஸ்ஸ அத்தநாயக்க தேர்தல் பிரச்சாரக் காலத்தில் குற்றம் சுமத்தியிருந்தார். இது தொடர்பிலான ஆவணங்களையும் அத்தநாயக்க சமர்ப்பித்திருந்தார்.குறித்த ஆவணம் போலியானது எனவும் அதற்கான ஆதாரங்கள் உண்டு எனவும் குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். விசாரணை நடத்துவதற்காக திஸ்ஸவை விளக்க மறியலில் வைக்குமாறு குற்ற விசாரணைப் பிரிவினர் கோரியுள்ளனர்.
[youtube https://www.youtube.com/watch?v=7kx4p2vpJDI]