பொது பல சேனா தேரர்களுக்கு பிணை
வர்த்தக , முதலீட்டு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து கலகம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட இனவாத அம...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_212.html

வர்த்தக , முதலீட்டு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து கலகம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட இனவாத அமைப்பான பொது பல சேனாவின் பிக்குகள் அறுவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு கோட்டே நீதவான் திலினகமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட அழைப்பாணையின் பேரில் பிக்குகள் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை நடத்துவதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர். ஆனால் சந்தேகநபர்களான பிக்குகளை பிணையில் விடுதலை செய்ய எதிர்ப்பு இல்லை என பொலிஸார் குறிப்பிட்டனர். கருத்துக்களை பரிசீலித்த நீதவான் சந்தேகநபர்களை தலா ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
எதிர்வரும் ஜூன் 4ம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


Sri Lanka Rupee Exchange Rate