கோட்டபாய கப்பலில் இருந்த வெள்ளைக்காரர்களும் கைதானார்கள்

சில மணித்தியாலங்களுக்கு முன்னர் காலி துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பலை, பொலிசார் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார்கள். இதில் வெள்ளைக்க...

images (3)சில மணித்தியாலங்களுக்கு முன்னர் காலி துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பலை,
பொலிசார் தமது கட்டுப்பாட்டில்
கொண்டுவந்துள்ளார்கள். இதில் வெள்ளைக்காரர் பலர் இருந்ததாக, அதிர்வின் கொழும்பு புலனாய்வுச் செய்தியாளர்
குறிப்பிடுகிறார். இவர்கள் பெரும்பாலும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த ஆயுதக் கப்பலை பொலிசார் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தவேளை, அவர்கள் தமது சட்டலைட் தொலைபேசிகளை
எடுத்து, யார்
யாரிடமோ பேசியுள்ளார்கள். இருப்பினும் எதுவும் பலிக்கவில்லை. பொலிசார் அனைவரையும் கைதுசெய்துள்ளார்கள்
என்று கூறப்படுகிறது. இவர்களிடம் இலங்கையில் தங்க விசா உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதன் காரணமாகவும் மேலும் ஆயுதங்களை வைத்திருந்த காரணத்திற்காகவும் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்
என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இதுதொடர்பாக பல பிரச்சனைகள் தோன்றியுள்ளது என்று
அறியப்படுகிறது. தற்போது மைத்திரி பக்கம் உள்ள சிலரே இதனைக் கண்டுகொள்ளவேண்டாம் என்று
கூறிவருகிறார்களாம். ரஷ்யா , இந்தியப் பெருங்கடலில் செய்யும் ஆயுத “நெட்வேர்க்” இது என்று கூறுகிறார்கள். இதில் பெரும்
பங்கு கோட்டபாய ராஜபக்ஷவுக்கும் உண்டு. இதனால் இது வெளிநாடுகள் சம்பந்தப்பட்ட விடையம்
என்று கூறுகிறார்கள். மேலும் பல திடுக்கிடும் செய்திகள் வெளியாக உள்ளது. அதுவரை அதிர்வின்
செய்திகளோடு இணைந்திருங்கள்.

Related

இலங்கை 5614768696394215557

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item