பசிலும், மனைவியும் மற்றுமொரு சிக்கலில் சிக்கினர்! உதவிய அதிகாரிகளும் மாட்டினர்
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரது மனைவியை சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு அனுப்பி வைத்துள்ளதாக கட்டுநாயக்க விமான ந...


முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரது மனைவியை சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு அனுப்பி வைத்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் தலைவர் பிரசன்ன விக்ரமசூரிய மற்றும் முகாமையாளர் சேன நந்திவீர ஆகியோருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விமான நிலைய தொழிற்சங்கங்கள் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய பிரபுக்கள் பகுதியில் பயணம் செய்வதற்கு உரிய அனுமதி பெற்றுக்கொள்ளாது பசிலும் அவரது மனைவியும் முக்கிய பிரபுக்கள் பகுதியின் ஊடாக சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முக்கிய பிரபுக்கள் பகுதியில் பயணம் செய்ய வேண்டுமாயின் வெளிவிவகார அமைச்சு அல்லது நாடாளுமன்றின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.
விமான நிலையத்தின் தலைவர் பிரசன்னவின் அறிவுறுத்தலுக்கு முகாமையாளர் சேன சந்திவீரவின் கையொப்பத்துடன் பசிலும் அவரது மனைவியும் முக்கிய பிரபுக்கள் பகுதியின் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஒருவரும் அவரது மனைவியும் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகவும் அதற்கு விமான நிலைய நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிடம் எழுத்து மூலம்தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.