வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ராஜபக்ஷ குடும்பம்! அம்பலப்படுத்தினார் மஹிந்த

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சதி முயற்சியின் மூலமே தான் தோல்வி அடைந்ததாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலின் பாது இந...


கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சதி முயற்சியின் மூலமே தான் தோல்வி அடைந்ததாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் பாது இந்தியாவின் றோ அமைப்பும் மேற்குலக புலனாய்வு அமைப்புகளும் இணைந்து எதிரணியினரை பலப்படுத்தினர்.

எனக்கு எதிராக இந்த புலனாய்வு அமைப்புக்களே செயற்பட்டன. இந்திய பிரதமர் நரேந்திர மோடியோ அல்லது அரசாங்கமோ இதற்கு காரணம் இல்லையென மஹிந்த தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுடன் இடம்பெற்ற செவ்வியின் போது இந்த விடயங்களை மஹிந்த தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது சதி முயற்சி என்பது மிகத்தெளிவான விடயம்.
இந்தியாவின் றோ புலனாய்வு சேவை, அமெரிக்காவின் சி.ஐ.ஏ புலனாய்வு சேவை, எம்.ஐ.6 அமைப்பு ஆகியனவே என்னை தோற்கடிக்க நடவடிக்கை எடுத்தன.
என்னை ஆட்சியில் இருந்து அகற்றும் திட்டங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னமே ஆரம்பிக்கப்பட்டது. சீனாவுடன் எனக்கு இருந்த தொடர்புகளே இந்த சதித்திட்டம் அரங்கேற காரணமாக இருந்தது.

ஜனாதிபதித் தேர்தலின் இறுதிக்கட்டத்தில் இதனை நான் அறிந்து கொண்டேன். இந்திய புலனாய்வு சேவையான றோவின் இந்த செயற்பாடுகளில் இந்திய பிரதமர் மோடிக்கு தொடர்பில்லை.

நான் புதிய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவிருந்தேன். ஆனால், தொடர்ந்து எனக்கும் எனது குடும்பத்தினருக்கு கொடுக்கப்படும் தொந்தரவுகள் காரணமாக நான் ஒத்துழைப்புகளை வழங்கவில்லை.

எங்களை சிறையில் அடைக்கும் தேவையே அரசாங்கத்திற்கு உள்ளது. எந்த சாட்சியங்களும் இல்லாமல் எமது கடவுச்சீட்டுக்களை எடுத்து கொண்டுள்ளனர்.

இப்படியான நிலைமையில் நான் எப்படி அரசியலில் இருந்து ஓய்வு பெற முடியும்?. நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக எப்போதும் கூறியதில்லை. தற்போது நான் ஓய்வெடுத்து கொண்டிருக்கின்றேன் என மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.

Related

இலங்கை 4372241673112615407

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item