பாடசாலைக்குள் துப்பாக்கியுடன் ஏழுவயதுச் சிறுவன்!!!
Bruay-sur-l'Escaut (Nord) இலிருக்கும் Léo-Lagrange பாடசாலைக்குள் ஒரு ஏழு வயதுச் சிறுவன் துப்பாக்கியுடன் வந்துள்ளான். இது ஒரு 3.65...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_564.html

சிறுவனிடமிருந்து ஒருவாறாக நிர்வாகம் துப்பாக்கியை வாங்கியதை அடுத்துக் காவற்துறையினர் அழைக்கப்பட்டனர். காவற்துறையினர் இந்தச் சிறுவனின் தந்தையைக் கைது செய்துள்ளனர். B ரக ஆயுதத்தைச் சட்டவிரோதமாக வைத்திருந்தமைக்காகவும் அதன் மூலம் சுற்றியிருந்தவர்களை ஆபத்திற்குள்ளாக்கிய குற்றத்திற்காகவும் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஏழு வயதுச் சிறுவனும் அவரது ஒன்பது வயதுச் சகோதரனும் அவர்களது குளியறை அலமாரிக்குள் இந்தத் துப்பாக்கியைக் கண்டுள்ளனர். அதனைப் பாடசாலைக்குக் கொண்டு சென்று நண்பர்களிற்குக் காட்ட இருவரும் முடிவெடுத்துள்ளனர்.
இவர்கள் இருவரும் தந்தையுடன் மட்டுமே வசித்து வருகின்றனர். இவரது தந்தை முன்னாள் நாடோடிக் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், தற்போது நிரந்தர வீட்டில் வசிப்பவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர் 28 முறை காவற்துறையினால் தண்டனை பெற்றுள்ளார், என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தான் கடந்த வாரம் தனது தொடர்புகள் மூலம் 100€ விற்கு சட்டவிரோதமாக இந்த ஆயுதத்தை வாங்கியதாகத் தந்தை தெரிவித்துள்ளார். ஆனால் B ரக ஆயுதங்கள் சட்டரீதியாக வாங்கியிருந்தால் கூட, அவை இருப்புப் பெட்டிக்குள் பூட்டிய நிலையிலேயே வைக்கப்படல வேணடும். இது சிறுவர்கள் கைக்கு எட்டும்படி வைத்தது பெருங்குற்றம். இதனால் சிறுவர்களிற்கான நீதிபதி இந்தச் சிறுவர்கள் இருவரையும் சமூகப்பாதுகாப்பு மையத்திற்கு, அவர்களின் பாதுகாப்புக் கருதி அனுப்ப உள்ளார்.
இன்று இந்தப் பிள்ளைகளின் தந்தை காலை நீதிமன்னறத்தில் விசாரிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கியைச் சட்டவிரோதமாக வைத்திருந்தமைக்காகவும் அதன் மூலம் சுற்றியிருந்தவர்களை ஆபத்திற்கள்ளாக்கிய குற்றத்திற்காகவும், அவரின் தொடர் குற்றங்களிற்காகவும், நீதிபதி அவரிற்கு ஒன்றரை வருடச் சிறைத்தண்டனை வழங்கி உள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate