இஸ்லாமிய தேசத்தின் பிரெஞ்சுக் கொலையாளி - அதிர்ச்சிதரும் தகவலும் புலனாய்வின் தோல்வியும்!!

இஸ்ரேலியப் பணயக் கைதியைச் சிறுவனை விட்டுச் சுட்டுக் கொன்ற நபர் பிரெஞ்சு மொழியிலேயே, யூதர்களிற்கு எச்சரிக்கை விட்ட நபர் துலுசைச் சேர்ந்தவ...

இஸ்ரேலியப் பணயக் கைதியைச் சிறுவனை விட்டுச் சுட்டுக் கொன்ற நபர் பிரெஞ்சு மொழியிலேயே, யூதர்களிற்கு எச்சரிக்கை விட்ட நபர் துலுசைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதைவிட முக்கியமான விடயம், துலுசில் இராணுவத்தினரையும் யூதக் குழந்தைகளையும் கொன்று குவித்துப் பிரான்சில் பெரும் பதற்றம் ஏற்படுத்திய சிற்றுந்துருளிக் கொலையாளி «tueur au scooter» மொகமட் மேராவின், ஒன்று விட்ட சகோதரன் என்ற அதிர்ச்சிகரமான விடயத்தை வெளியிட்டுள்ளனர். இவர் பெயர் Sabri Essid எனத் தெரிவித்துள்ளனர். ஜிகாதி ஆராய்வின் நிபுணரான RFI செய்தியாளர் David Thomson இந்த விபரத்தை வெளியிட்டுள்ளார்.



 இந்த விடயத்தினைப் பிரான்சின் புலனாய்வுத்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

சப்ரி எசிட், இதுவரை காலமும் மிகவும் இரகசியமாகவே இயங்கி வந்துள்ளார். புலனாய்வுத் துறையினரின் கண்காணிப்பிலிருந்து தப்பி கடந்த ஒரு வருடமாகச் சிரியாவிற்குச் சென்றுள்ளார். 2006 ஆம் ஆண்டிலேயே இவர் சிரியாவிற்குச் சென்றிருந்துள்ளார். அங்கு அல்கைதாவின் தொடர்பில் இயங்கியதால் கைது செய்யப்பட்டுப் பிரான்சிற்கு அனுப்பப்பட்டு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார்.

 இவரும் மொகமட் மேராவினுடன், தொடர்ந்து நெருங்கிய தொடர்புகள் பேணி வந்துள்ளார்கள். அவரின் தூண்டுதலின் பேரிலேயே இவர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்துள்ளார்.

மொகமட் மேரா இன்று மூன்று ஆண்டுகளிற்கு முன்னர், மார்ச் 11ம் திகதி 2012 இல்  தனது முதற் தாக்குதலை மேற்கொண்டுள்ளார். அதுவும் ஒரு புதன் கிழமை. அதன் நினைவு நாளாகவே சப்ரி எசிட் இந்தப் படுகொலையை மேற்கொண்டுள்ளாரா, என்பதும் கேள்விக்குரியதான உள்ளது. 


முகமட் மேராவின் குடும்பமும் உறவினர்களும் தொடர் கண்காணிப்பிலேயே இருந்தபோதும், சப்ரி எசிட் கண்காணிப்பிலிருந்து தப்பியுள்ளமை பிரான்சின் புலனாய்வுத் துறையினரின் பெரும் தோல்வியே!!

Related

உலகம் 479371365181027235

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item