அமெரிக்காவில் இடம்பெற்ற இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 11 இராணுவ வீரர்கள் பலி
அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது கடுமையான பனிமூட்டத்தினால் அந்த ஹெலிகாப்டர் மல...
http://kandyskynews.blogspot.com/2015/03/11.html

அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது கடுமையான பனிமூட்டத்தினால் அந்த ஹெலிகாப்டர் மலையில் மோதி விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் 11 இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். புளோரிடா மாநிலத்தில் எக்லின் விமானப் படை தளத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு (11) யுஎச்80 என்ற இராணுவ ஹெலிகொப்டர் இரவு நேர பயிற்சிக்கு சென்றது. அந்த ஹெலிகொப்டரில் 7 கப்பல் படை வீரர்களும் 4 விமானப் படை வீரர்களும் பயிற்சிக்கு சென்றிருந்தனர்.
அப்போது புளோரிடா மாநிலத்தை சுற்றியுள்ள பல்வேறு மலைப் பகுதிகள் கடுமையான பனி மூட்டத்துடன் காணப்பட்டது.
பயிற்சிக்கு சென்ற ஹெலிகொப்டர் மலைப்பகுதியில் வழி தெரியாமல் தடுமாறியது. இதுகுறித்து விமான கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடுமையான பனிமூட்டத்தினால் நேற்று (12) அதிகாலை அந்த ஹெலிகொப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அமெரிக்க இராணுவம் மற்றும் பொலிஸார் மீட்பு குழுவினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர்.
இந்த விபத்தில் இறந்து போன 11 பேரின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது என்று எக்லின் இராணுவ விமானதள அதிகாரி என்டி பவுர்லான்ட் கூறினார்.
பலியான 11 பேரின் குடும்பத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா இரங்கல் தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate