ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ள தெக்ரித் நகருக்குள் நுழைந்தது ஈராக் ராணுவம்

ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ள தெக்ரித் நகருக்குள் ஈராக் ராணுவம் நுழைந்து முன்னேறி வருகிறது. ஈராக்கிலும், சிரியாவிலும்...














    ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ள தெக்ரித் நகருக்குள் ஈராக் ராணுவம் நுழைந்து முன்னேறி வருகிறது.

    ஈராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தனிநாடு உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து நாசவேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். தீவிரவாதிகளை குறி வைத்து அமெரிக்கா போர் விமானங்கள் மூலமாக வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் கடந்த ஆகஸ்டு மாதம் 8–ந் தேதி முதல் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

    ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது குறிப்பிட்ட அளவுக்கு தரைவழி தாக்குதல் நடத்தவும் படைகள் தயார் படுத்தப்பட்டு உள்ளது. ஈராக் நகரில் முக்கிய நகரங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ஈராக் படை, அமெரிக்க ராணுவ உதவியுடன் போர் புரிந்து வருகிறது. ஈராக் படை அந்நாட்டின் மக்கள் அதிகமாக வசிக்கும், தெக்ரித் நகருக்குள் நுழைந்துள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக, கடந்த 10 நாட்களாக போரிட்டு நகருக்குள் ஈராக் படை நுழைந்து உள்ளது. அங்கு இருதரப்பிற்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. ஈராக் ராணுவம், துணை பாதுகாப்பு படை உதவியுடன் முன்னேறி வருகிறது.

    ஏற்கனவே அமெரிக்கா தலைமையிலான உலக நாடுகளின்படை தீவிரவாதிகளிடம், இருந்து ஒருசில நகரங்களை திரும்ப மீட்டது. தெக்ரித் நகரையும் மீட்க ஈராக் ராணுவம் போராடி வருகிறது. இது தீவிரவாதிகளுக்கு மிகப்பெரிய அடியாகும். இதற்கிடையே ஈராக் ராணுவத்தை குறிவைத்து தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதலும் நடத்தி உள்ளனர்

    Related

    உலகம் 1980142337185687303

    Post a Comment

    emo-but-icon

    Advertise Your Ad Here

    Advertise Your  Ad Here

    Connect Us

    Side Ads

    Hot in week

    Recent

    item