சந்திரிக்கா, கூட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய தரப்பினருடன் மோடி சந்திப்பு!
சிறிலங்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_237.html

சிறிலங்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சந்திப்பினைத் தொடர்ந்து நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவையும் சந்திக்க உள்ளார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் இந்திய பிரதமர் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்.
தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
தாயகப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் சந்திந்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் மோடி சந்திப்பார் என முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)


Sri Lanka Rupee Exchange Rate