பிரேசிலில் பாடசாலையொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்

பிரேசிலில் பாடசாலையொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் நால்வர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். ...

பிரேசிலில் பாடசாலையொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்
பிரேசிலில் பாடசாலையொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் நால்வர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த இரு ஆசிரியர்களும் இரண்டு மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை முடிந்து மாணவர்கள் வெளியேறும்
சந்தர்ப்பத்தில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
20 வயதான இளைஞனே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related

உலகம் 5165519262649708165

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item