முன்னாள் இராணுவ பிரிகேடியருக்கு மரண தண்டனை
தனது மனைவியை சுட்டுக்கொன்ற வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டவரான முன்னாள் இராணுவ பிரிகேடியருக்கு இன்று மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளத...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_171.html
தனது மனைவியை சுட்டுக்கொன்ற வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டவரான முன்னாள் இராணுவ பிரிகேடியருக்கு இன்று மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கம்பஹா உயர் நீதிமன்றத்தினாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி கிரிபத்கொட,மாகொல பிரதேசத்தில் அமைந்துள்ள தனது வீட்டில் வைத்தே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.
துப்பாக்கி பிரயோகத்தில் 40 வயதுடைய அவரது மனைவி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.