சிறிலங்காவை தாக்கிய பாரிய எரி நட்சத்திரம்?
சிறிலங்காவின் பொலனறுவை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மிதமான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_143.html

சிறிலங்காவின் பொலனறுவை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மிதமான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு 8.30 முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
கிரிதலே, பகமுன, கதுருவெல மற்றும் தியபெதும ஆகிய பிரதேசங்களிலே இந்த அதிர்வு ஏற்பட்டதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. இது ரிக்டர் மானியில் 2.8 மெக்னிரியுடாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலிருந்து வீழ்ந்த எரி நட்சத்திரத்தினால் இந்த அதிர்வு ஏற்பட்டுள்ளதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீவியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன கருத்து வெளியிடுகையில்,
இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் படி, பாரிய எரி நட்சத்திரம் ஒன்று பூமியில் வீழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அவர் தெரிவித்தார்.