பொதுத்தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவோம்: ஞானசார
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ‘சிங்கள’ பௌத்தர்களைப் பாதுகாப்பதற்காக தாம் போட்டியிடப்போவதாக தெரிவிக்கிறார் பொது பல சேனாவின் செயலாளரும் ...

கடந்த தேர்தலில் தமது வாக்கு வங்கியைக் கொண்டு மஹிந்த ராஜபக்சவை வெல்ல வைப்போம் என சூளுரைத்த ஞானசார தேர்தல் முடியும் வரை அடங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் தற்போது பொதுத் தேர்தலில் பௌத்தவாதத்தைக் கொண்டு தலையெடுக்க முயல்வதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்ற அதேவேளை, அமைச்சர்கள் மங்கள சமரவீர மற்றும் ராஜித சேனாரத்ன உட்பட பிரதமரும் குறித்த பேரினவாத அமைப்புக்கு எதிரான நிலைப்பாட்டைக் கடந்த காலங்களில் வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.