இலங்கைக்கான உதவித் திட்டங்களுக்கு 500 கோடி ரூபாவை ஒதுக்கியது இந்தியா!

2015 – 2016ம் ஆண்டுக்கான இந்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில், இலங்கையின் உதவித் திட்டங்களுக்கு 500 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்ப...

indian-national-symbol
2015 – 2016ம் ஆண்டுக்கான இந்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில், இலங்கையின் உதவித் திட்டங்களுக்கு 500 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று 2015 – 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். இதில் இந்திய வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 19 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடாக, வெளிநாடுகளில் பொருளாதார , தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்கான நிதி ஒதுக்கீடு 9107 கோடி ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வரவு செலவுத் திட்டத்தில், இதற்கென 7234.26 கோடி ரூபாவே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்திய வெளிவிவகார அமைச்சுக்கான மொத்த நிதி ஒதுக்கீட்டில் 61 வீதம், வெளிநாடுகளுக்கான பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டங்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.


அதிகபட்சமாக பூட்டானுக்கு, 6160.20 கோடி ரூபாவும், ஆப்கானிஸ்தானுக்கு, 676 கோடி ரூபாவும், இலங்கைக்கு 500 கோடி ரூபாவும், மாலைதீவுக்கு 183 கோடி ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related

உலகம் 570139277688486381

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item