சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அனுர சேனாநாயக்கவை கைது செய்ய உத்தரவு!

அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் பணிப்புரைக்கமைய, முன்னாள் மேல் மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அனுர சேனாநாயக்கவை உடனடியாக கைது செய்து வி...

அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் பணிப்புரைக்கமைய, முன்னாள் மேல் மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அனுர சேனாநாயக்கவை உடனடியாக கைது செய்து விசாரணைக்குட்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு பியகம விலேஜ் உரிமையாளர் பேர்ணாட் ஜெயரத்தினவின் கொலை சம்பந்தமாக நேற்று விசேட பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி, மற்றும் பொலிஸ் இண்ஸ்பெக்டர் ஆகியோர் வழங்கிய தகவல்களின் படி இக் கொலையில் சம்பந்தப்பட்டவராகவே முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டு பியகம விலேஜின் உரிமையாளர் (வயது 65) என்பவரை துண்டம் துண்டமாக அவரது பகல தொம்பே தோட்டத்தில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தார். இக் கொலையை கொலைசெய்யப்பட்டவரின் மகனே செய்தார் என விசாரனையில் தெரியவந்தது. இச் செய்தி ஊடகங்களில் மிகவும் பரபரப்பாக அன்று பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக் கொலை சம்பந்தமாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக தற்பொழுது கடமையில் இருந்த பத்திலகே விமலசேனா, யாழ்ப்பாணத்தில் கடமையில் இருந்தவர் மற்றும் அல்பிட்டிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த ராஜகருன, நேற்று சி.ஜ.டியினரால் கைது செய்யப்பட்டனர். இக் கொலை திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை எனக் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன் இக் கொலையில் அன்று சம்பந்தப்பட்ட 2 விசேட பொலிஸ் அதிகாரிகளே கொலைசெய்தவரின் மகனுக்கு வெடிப்பொருட்களை வழங்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Related

இலங்கை 4236682358641854648

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item