இளவரசர் வில்லியம் வருகையை முன்னிட்டு சீனாவில் யானை தந்தம் இறக்குமதிக்கு தடை
சீனாவில் இயங்கி வரும் தந்தம் செதுக்கும் கம்பெனிகளுக்காக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் டன் கணக்கில் யானை தந்தம் இறக்குமதி செய்ய...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_786.html

சீனாவில் இயங்கி வரும் தந்தம் செதுக்கும் கம்பெனிகளுக்காக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் டன் கணக்கில் யானை தந்தம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் யானைகளின் நலன் கருதி கொண்டுவரப்பட்ட சர்வதேச தந்த வர்த்தக தடை ஒப்பந்தத்தில், சீனா கடந்த 1981-ம் ஆண்டு கையெழுத்து இட்டுள்ளது. எனினும் 62 டன் தந்தம் வாங்குவதற்காக 2008-ம் ஆண்டு தடை விலக்கு பெற்றது.
சீனாவின் இந்த யானை தந்த வர்த்தகத்தை விலங்கியல் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். குறிப்பாக இங்கிலாந்து இளவரசர் வில்லியம் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அவர் அடுத்த வாரம் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
எனவே அவரது வருகையை முன்னிட்டு தந்தம் இறக்குமதிக்கு ஓராண்டு தடை விதிக்க சீனா முடிவு செய்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத கடைசி வரை தந்தம் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவின் இந்த முடிவால் ஆப்பிரிக்க யானைகள் பாதுகாக்கப்படுவதுடன், ஓராண்டுக்குப்பின் யானைகளின் வளத்தை ஆய்வு செய்யவும் முடியும் என அந்த நாட்டு பத்திரிகைகள் கூறியுள்ளன.