நிர்மாணிக்கப் பட்டுவந்த மஸ்ஜித் இடித்து அழிப்பு , அரசியல்வாதிகள் மௌனம்

மின்னேரியா ஹிங்குரக்கொடை போகஹதமன கிராமத்தில் பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் நிர்மாணிக்கப்பட்டுவந்த மஸ்ஜித் ஒன்று சிங்கள ...

மின்னேரியா ஹிங்குரக்கொடை போகஹதமன கிராமத்தில் பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் நிர்மாணிக்கப்பட்டுவந்த மஸ்ஜித் ஒன்று சிங்கள இனவாதிகளினால்  தாக்கி இடித்து அழிக்கப்பட்டுள்ளதுடன் பிரதேச முஸ்லிம்களுக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்படுகிறது .
ஜனாதிபதி மைத்ரீபால   சிறிசேனவின்  புதிய அரசில் இன ஐக்கியம் பாதுகாக்கப்படும் , இனச்சுதந்திரம் உறுதி செய்யப்படும் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் பிரதேசத்திலேயே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளமை அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.என சுட்டிக்காட்டப் பட்டுள்ளது
இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவலை இங்கு பதிவிடுகிறோம்
Aliff alert tv-
மைத்ரி நல்லாட்சியில் ஹிங்குரக்கொடை போகஹதமன முஸ்லிம் பள்ளிவாயல் தரை மட்டம் மைத்ரி அரசு மெளனம் மின்னேறிய ஹிங்குரக்கொடை போகஹதமன கிராமத்தில் பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் நிர்மாநிக்கப்பட்டுவந்த முஸ்லிம் பள்ளிவாயல் சிங்கள இனவாதிகளால் முற்றாக  தகர்த்தெறியப்பட்டுள்ளது எனினும் இதுபற்றி அரசு முஸ்லிம் கலாச்சார அமைச்சு மேலான விரதத்தை கடைப்பிடித்து வருகின்றது.
சுமார் 80 விவசாய முஸ்லிம் குடும்பங்கள் வாழும் போகஹதமன கிராமமானது ஹிங்குரக்கொடையிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நாலாபுறமும் சிங்கள கிராமங்கள் அமையப்பெற்ற இக்கிராமத்தில் இதுவரை பள்ளிவாயல்கள் ஏதும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது இவர்கள் இதுவரை காலமும் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஹதமுன அல்லது நுகஹதமுன என்றழைக்கப்படும் சுமார் 130 முஸ்லிம் குடும்பங்கள் வாழும் கிராமத்தின் பள்ளிவாயளுக்கே மார்க்க நடவடிக்கைகளுக்காக  வருகை தந்தனர்.
இதற்கு பரிகாரமாகவே போகஹதமன  கிராம முஸ்லிம்கள் தமக்கென ஒரு பள்ளிவாயலை அமைக்கும் பணியை கடந்த ஜனவரி மாதம் அவர்களது உரிய பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையின்   பூரண அனுமதியுடன் ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் மெளனம் பேணிய கிராமத்தின் சிங்கள மக்கள் கட்டட நிர்மாணப்பணிகள் சுமார் 7 அடி உயரத்தை எட்டியதன் பிறகு திடீரென வருகைதந்து கிராம சேவகர் மற்றும் கிராமத்துன் பெளத்த பிக்குவின் ஊடாக நிர்மாணப்பணிகளை நிறுத்துமாறும் இல்லாவிடின் கிராம மக்களை கொன்றுவிடுவோம் என்றும் பயமுறுத்தியிருக்கின்றனர்.
இந்த நிலையில் போகஹதமன கிராம முஸ்லிம்கள் போலீசில் சென்று முறைப்பாடு செய்துள்ளனர். இதன்போது இருதரப்பினரையும் வரவழைத்து பொலிசார் நிலைமையை விபரித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் வரை கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறும், சிங்களவர்கள் மேலும் பிரச்சினைகளை உருவாக்ககூடாது என்றும் சமரசம் செய்து அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் நடந்து மூன்று நாட்களில்(கடந்த வாரம்) ஊர் சிங்களவர்கள் ஆயுதங்கள் உபகரணங்களுடன் பள்ளிவாயல் நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு வந்து முச்ல்ம்களை கொலை செய்வதாக மிரட்டி இடைநடுவில் நிறுத்தப்பட்டிருந்த கட்டடத்தை டோர்சர் மூலம் தரைமட்டமாக்கிவிட்டு சென்றிருக்கின்றனர்.
இது சம்பந்தமாக இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது கவலைக்கிடமான விடயமாகும் மைத்ரீபால   சிறிசேன ஜனாதிபதியின் புதிய அரசில் இன ஐக்கியம் பாதுகாக்கப்படும் இனச்சுதந்திரம் உறுதி செய்யப்படும் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் பிரதேசத்திலேயே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளமை அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.இது சம்பந்தமாக இதுவரை உரியவர்களை தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் மேட்கொள்ளபடவில்லை என்பது கசப்பான விடயமாகும்.
எனவே இதனை அனைவருக்கும் தெரியப்படுத்த நடவடிக்கை மேட்கொள்ளப்படவேண்டும். நல்லாட்சியின் பண்புகள் 50 நாட்களுக்குள் இல்லாமல் போயிருப்பது ஏன் என்பதை மக்கள் அரசாங்கத்தை வினவ வேண்டும் இந்த அப்பாவி விவசாயக் குடும்பங்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்பாடல் வேண்டும். முஸ்லிம் கலாசார அமைச்சர் ஹலீம் அவர்களே உங்கள் முதல் பொறுப்பை கேவலமாக நிறைவேற்றிய நிலையில் இந்தப்பொறுப்பை எவ்வாறு நிறைவேற்றி அந்த அப்பாவி முஸ்லிம்களுக்கு எவ்வாறான முடிவைப் பெற்றுக்கொடுக்கப் போகிறீர்கள்? அமைச்சர் ரவுப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோருக்கு இது பற்றி எதுவும் தெரியாதா? அல்லது அமைச்சுப் பதவிப்பொருப்புக்கள் உங்களுக்கு சமூகத்தின் அவலங்கள நோக்குவதற்கு தடங்கலாக இருக்கின்றனவா? எங்கே உங்கள் சமூக உணர்வு? அல்லது தேர்தல் அண்மிக்கும் வரை பொறுமை காக்கிண்றீர்களா? உங்கள் சமூக உணர்வு அப்பாவி மக்களுக்கு என்ன நியாயத்தை வழங்கப்போகின்றது?????


mo 2

Related

இலங்கை 8003916103000708155

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item