வடமேற்கு பாகிஸ்தானை உலுக்கிய 5.4 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சி
வடமேற்கு பாகிஸ்தானை 5.4 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சி வெள்ளிக்கிழமை தாக்கியுள்ளது. கைபர் பகதுன்கவா மாகாணத்தில் மன்ஸெஹ்...
http://kandyskynews.blogspot.com/2015/02/54.html

வடமேற்கு பாகிஸ்தானை 5.4 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சி வெள்ளிக்கிழமை தாக்கியுள்ளது.
கைபர் பகதுன்கவா மாகாணத்தில் மன்ஸெஹ்ரா நகரின் வடகிழக்கே 37 கிலோ மீற்றர் தொலைவில் 28.9 கிலோமீற்றர் ஆழத்தில் தாக்கிய இந்த பூமியதிர்ச்சியை தொடர்ந்து அந்தப் பிராந்தியத்தில் 3.2 ரிச்டர் மற்றும் 4 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சிகள் தாக்கியுள்ளன.
இந்த பூமியதிர்ச்சியானது தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் பாகிஸ்தானிய காஷ்மீர் உள்ளடங்கலான பிரதேசங்களில் உணரப்பட்டுள்ளது.
மேற்படி பூமியதிர்ச்சியால் மன்ஸெஹ்ரா பிராந்தியத்தில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இரு வீடுகள் சேதமடைந்துள்ளன.


Sri Lanka Rupee Exchange Rate