பழி வாங்கும் மைத்திரி! கொந்தளிக்கும் மஹிந்த
சமகால ஆட்சியாளர்களிடமிருந்து அரசியல்வாதிகளின் மனைவியரையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நேரிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_132.html

சமகால ஆட்சியாளர்களிடமிருந்து அரசியல்வாதிகளின் மனைவியரையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நேரிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி, சசி வீரவன்சவை மஹிந்த நேற்று பார்வையிட்டார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு மஹிந்த கருத்து வெளியிட்டார்.
அரசியல்வாதிகள், அரசியல்வாதிகளின் மனைவியர் மட்டுமன்றி அரசியல்வாதிகளின் பிள்ளைகளையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
இந்த அரசாங்கம் அரசியல்வாதிகளையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் துன்புறுத்தி வருகிறது.
இவ்வாறான நடவடிக்கைகள் நல்லதற்கல்ல. குரோத அரசியல் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
பழிவாங்கும் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. எந்த சந்தர்ப்பத்திலும் தாம் பழிவாங்கவில்லை. தாம் குற்றமற்றவர் என்ற காரணத்தினால் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது குற்றம் சுமத்தும் தகுதி தமக்கு இருப்பதாகவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய ஆட்சியாளரான மஹிந்த உள்ளிட்ட அவரின் குடும்பத்தினர் பாரிய ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate