அரசியலில் குதிக்கும் சங்கக்கார! அதிர்ச்சியில் அரசியல்வாதிகள்
சிறிலங்கா கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர் குமார் சங்கக்கார அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் ஐக்கிய தேசிய கட்சியை ப...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_746.html

சிறிலங்கா கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர் குமார் சங்கக்கார அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தல் களத்தில் குதிக்கவுள்ளதாக தெரிய வருகிறது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் குமார் சங்கக்காரவை போட்டியிடச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கட்சி உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டி மாவட்டத்தில் குமார் சங்கக்கார போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறுவதற்கு முன்னதாகவே இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட அரசியல்வாதிகள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.