1000 ஏக்கர் காணியில் மூன்று கிழமைக்குள் மீள்குடியேற்றம்
வலிகாகம் வடக்கில் உள்ள ஆயிரம் ஏக்கர் காணியில் மூன்று கிழமைக்குள் மீள்குடியேற்றம் செய்யப்படும் என, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாத...
http://kandyskynews.blogspot.com/2015/02/1000_28.html

வலிகாகம் வடக்கில் உள்ள ஆயிரம் ஏக்கர் காணியில் மூன்று கிழமைக்குள் மீள்குடியேற்றம் செய்யப்படும் என, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடுகையில்,
வலிகாம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்றம் செய்வது தொடர்பாக கலந்துரையாடி இருந்தோம்.
அதில் முதல் கட்டமாக உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள ஆராயிரத்து 300 ஏக்கர் காணியில் 1000 ஏக்கர் காணி முதல் கட்டமாக விடுவிக்கப்பட்டு அங்கு மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை மூன்று கிழமை அவகாசத்துக்குள் செய்து முடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது, அதனை துரிதமாக மேற்கொள்வதற்கு ஒரு செயற்குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை வலி. வடக்கு மக்களை வளலாய் பகுதியில் மாதிரி கிராமம் உருவாக்கப்பட்டு அங்கு குடியேற்றுவது குறித்து முன்மொழியப்பட்ட திட்டம் கைவிடப்பட்டு உள்ளது.
இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றவே முயற்சிகளை மேற்கொள்கின்றோம் என தெரிவித்தார்.


Sri Lanka Rupee Exchange Rate