ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: நாடாளுமன்றில் சூடு பிடிக்குமா?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்த்...

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்ளுமாறு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அமர்வுகளின் போது வலியுறுத்தவுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்ற செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் கூட்டப்படும் போது, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்ளுமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அடுத்த வாரம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வாரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதமருக்கு எதிராக 8 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் பிரதமர் ஒருவருக்கு எதிராக 112 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிப்பது இதுவே முதல்முறையாகும்.

நாடாளுமன்ற செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில், 112 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அத்துடன் இதற்கு முன்னதாக இந்த பிரேரணையில் 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டிருந்தபோதிலும்,113 என்பது துரதிஸ்டவசமான எண் என்பதால் ஒரு உறுப்பினரின் கையொப்பம் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில், எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா உட்பட தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலரும் கையொப்பம் இட்டுள்ளனர்.

எனினும் இந்தப் பிரேரணையில் போலியான கையொப்பங்கள் இடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும்,நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் குற்றம் சுமத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

தலைப்பு செய்தி 7159720490525291529

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item