முடியாவிட்டால் எம்மிடம் ஒப்படைத்து விட்டு அரசாங்கம் வீடு செல்ல வேண்டும்!- மஹிந்த

ஆட்சி நடத்த முடியாவிட்டால் எம்மிடம் ஒப்படைத்து விட்டு அராசங்கம் வீடு செல்ல வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ...

ஆட்சி நடத்த முடியாவிட்டால் எம்மிடம் ஒப்படைத்து விட்டு அராசங்கம் வீடு செல்ல வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஹேனகம ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தம்சக் விஹாரை மற்றும் கெடுமான சதஹாம் விஹாரை ஆகியவற்றில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்ற பின் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் நூறு நாள் திட்டத்தில் நாம் முன்னெடுத்த அபிவிருத்தித் திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்வதனையும், எம்மை பழிவாங்குவதனையும் மட்டுமே செய்கின்றது.

நல்லாட்சி என்பது என்ன?

நாம் இந்த அரசாங்கத்திற்கு கூறுகின்றோம், பொய்களை நிறுத்திவிட்டு முடியாவிட்டால் முடிந்தவர்களிடம் ஒப்படைத்துவிட்டு செல்ல முடியும்.

தற்போது நாட்டின் அபிவிருத்தி முற்று முழுதாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.



எனது ஆட்சிக் காலத்தில் பணமும் இருந்தது பொருளாதார அபிவிருத்தியும் இருந்தது.

தற்போது இந்த அரசாங்கம் நெருக்கடி நிலைமைகளை எதிர்நோக்கி வருகின்றது.

செய்வதறியாது தவிக்கின்றது. முடியாவிட்டால் எம்மிடம் ஒப்படைக்க முடியும் நாம் ஏற்கனவே செய்தவர்கள்ää எஞ்சியவற்றையும் எம்மால் செய்ய முடியும்.

பழிவாங்கும் போது நினைத்துப் பார்க்க வேண்டும் அதிகாரம் இல்லாத காலத்தில் இவை மீளவும் எம்மை தாக்கும் என்பதனை.

எங்கள் கைகளிலும் பிழைகள் இடம்பெற்றன.

சில அமைச்சர்கள் செய்த குப்பைத்தனமான கீழ்த்தரமான செயற்பாடுகளை நாம் மூடிமறைத்தோம்.

அதன் பிரதிபலன்களையே நான் இன்று அனுபவிக்கின்றேன்.

எனினும் அந்த எருமைமாட்டு வேலைகளை மீண்டும் நான் செய்ய மாட்டேன்.

நான் இப்போது மக்களை அறிந்து கொண்டேன் என மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்

Related

தலைப்பு செய்தி 7076504743297704385

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item