ரணில் விக்ரமசிங்கவே நாட்டுக்கு பொருத்தமான பிரதமர்!- விஜேதாஸ ராஜபக்ச
நாட்டிற்கு மிகவும் பொருத்தமான பிரதமர் ரணில் விக்ரமசிங்க என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்...


நாட்டிற்கு மிகவும் பொருத்தமான பிரதமர் ரணில் விக்ரமசிங்க என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
100 நாட்கள் என கூறி 200 நாட்களை பெற்றுக்கொண்டது ஆரோக்கியமான செயல் அல்ல. எனினும் வெகு விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும்.
நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் ஒன்றுக்கு செல்வதனை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.
ஜனாதிபதிக்கு அவசியமான எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவருக்காக செயற்படுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி ஆயத்தமாகவே உள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு ஒருவரும் இப்பதவிக்கு பொருத்தமானவர்கள் அல்ல.
ரணில் விக்ரமசிங்கவை தவிர நாமல் அல்லது மேர்வின் அப்பதவிக்கு பொருத்தமானவர்களா என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார்.