மோடியின் வருகையையொட்டி யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதம்

யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் இந்தியப் பிரதமர் இலங்கையில் வடக்கு,கிழக்கு தமிழ் மக்களுக்கு அடிப்படை மற்றும் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில்...


யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் இந்தியப் பிரதமர் இலங்கையில் வடக்கு,கிழக்கு தமிழ் மக்களுக்கு அடிப்படை மற்றும் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் அக்கறை செலுத்தக்கோரி போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வி.சகாதேவன் இன்று யாழ். பொது நூலக முன்றலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இப்போராட்டம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில், வடக்குக் கிழக்கு தமிழ் மக்கள் கலாசாரத்திலும், பண்பாட்டிலும், பாரம்பரியத்திலும் கொண்டுள்ள பற்றுறுதியை பிரதிபலிக்கும் வைகயில் ஈழத்தின் சிரசென விளங்கும் உலக தமிழர்களின் கலாசார வாழ்விடமான யாழ்ப்பாணத்தில் இம் மாதம் 14ம் திகதிக இந்திய அரசால் 900 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள கலாசார மையத்துக்கான விழாவில் தாங்கள் கலந்துகொள்ளவுள்ளமை எமக்குதாங்கள் அளிக்கும் கௌரவத்தின் அடையாளமாக ஏற்றுக்கொள்கிறோம்.

இத்துடன் நில்லாது நீண்டகாலமாக நீடித்துவரும் எல்லை தாண்டும் மீனவர் பிரச்சினைக்கு உறுதியான முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என தங்களை தயவுடன் கேட்டுக்கொள்கிறோம். தமிழர் பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது பிரதமர் என்றவகையில் தங்களை இரு கரம் கூப்பி வரவேற்க கடமைப்பட்டுள்ளோம். வரவேற்பும் உபசரிப்பும் எம் தமிழ் இனத்துக்கே உரிய தலையாய பண்புகளாகும்.

மேற்படி விடயங்களுக்கு அப்பால் தாங்கள் இலங்கையில் தங்கி இருக்கும் வேளையில்...

1. அரசியல் கைதிகள், கடத்தப்பட்டோர் காணாமல்போனோர் விடுதலை.

2. எல்லைதாண்டும் மீனவர் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணுதல்

3. யுத்தத்தினால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பீடுகள் வழங்குதல்

4. விதவைகள், அனாதைகள், காயமடைந்தோருக்கான உதவிகள்.

5. வடக்குகிழக்கு பிள்ளைகளின் கல்விக்கு, வேலைவாய்ப்புக்கு உதவுதல்

6. இடம் பெயர்ந்த, புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு தமது சொந்தக் காணிகளை கிடைக்கச் செய்தல்.

7. உள்ளூரில், சர்வதேசத்தில், தமிழகத்தில் அகதிகளாகவுள்ள எம்மக்களின் மீள் குடியேற்றம், தொழில், வீட்டுவசதிகள்.

8. போரில் இறந்தவர்களை நினைவுகூர நினைவுச்சின்னம் ஒன்றையும், நினைவுநாள் ஒன்றையும் பிரகடனப்படுத்தல்.

9. ஐக்கிய நாடுகள் பேரவையின் தீர்மானத்தில் ஈழத்தமிழ் மக்ளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தல்.

10. ஈழத்தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுக்கான ஏற்பாடு.

ஆகிய விடயங்களில் தங்களது இதயபூர்வமான பற்றுதியையும் தலையீட்டினையும் வேண்டி போரால் பாதிக்கப்பட்ட வடக்குகிழக்கு தமிழ்மக்கள் சார்பாக கோரிக்கையினை முன்வைத்து இன்று 12.03.2015 எமது உணர்வினை அகிம்சை ரீதியாக வெளிப்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு உண்ணாவிரத்தினை ஆரம்பிக்கின்றோம்.

எனவே நாம் உங்களிடம் இரக்கத்துடனும், வேதனையுடனும், இயலாமையுடனும் கேட்கிறோம். உண்மையின் பெயரால், சத்தியத்தின் பெயரால், நீதியின் பெயரால் கேட்கிறோம் இழப்புக்கள் மத்தியில், அழிவுகள் மத்தியில் தாங்கொணாத் துயரத்தோடும், கண்ணீரோடும் கேட்கிறோம். இலங்கை தமிழ் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள தாய்தமிழக உறவிகளின் தூதுவராக உங்களை நினைத்துக் கேட்கிறோம். யுத்ததின் அடையாளமாகிப்போன எமது சுமைகளை இறக்கி ஆறுதல் பெறுவதற்கு ஒரு திட்டத்தை அறிவிக்குமாறு கேட்கிறோம் என்றார்.

Related

இலங்கை 8737975656662584686

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item