மோடி வருகைக்காக கொழும்பு விழாக்கோலம்! - மன்னாரில் பாதுகாப்பு அதிகரிப்பு.

                                இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகள் விழாக்கோல...

                               

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. வீதிகள் மற்றும் முக்கியமான இடங்கள் போன்றவற்றில் இரு நாட்டுக் கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன. குறிப்பாக பழைய நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதமர் மோடியை வரவேற்கும் முகமாக விசேடமான மேடை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, நாளை இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் சனிக்கிழமை தலைமன்னார் பியர் பகுதிக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. தலைமன்னார் பியர் பகுதிக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர், காலை 11 மணியளவில் தலைமன்னார் துறை புகையிரத நிலையத்திலிருந்து கொழும்புக்கான புகையிரத சேவையினை ஆரம்பித்து வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமரின் வருகையை முன்னிட்டு, தலைமன்னார் துறை புகையிரத நிலையத்தை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸார் இன்று மாலை விசேட கடமைக்காக தலைமன்னார் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related

இலங்கை 1073311132390419975

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item