மஹிந்த அணியுடன் தொடர்பினை பேணும் சம்பிக்க ரணவக்க!
அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் ஜாதிக ஹெல உறுமயவும் இனவாதத்தை பேசி சுய அரசியல் இலாபத்தை தேடுவதாகவும் மஹிந்த ராஜபக்ச அணியுடன் தொடர்புகளை பேணி வ...


அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் ஜாதிக ஹெல உறுமயவும் இனவாதத்தை பேசி சுய அரசியல் இலாபத்தை தேடுவதாகவும் மஹிந்த ராஜபக்ச அணியுடன் தொடர்புகளை பேணி வருவதாகவும் கொழும்பு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி குமுது குசும் குமார குற்றம் சுமத்தியுள்ளார்.
சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அரசாங்கத்துக்கும் பாரிய களங்கம் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பிக்க ரணவக்க 2020ஆம் ஆண்டு ஜனாதிபதியாக வரவேண்டும் என்று அடிப்படையிலேயே ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதில் சில நிபந்தனைகளை விதித்திருந்தார்.
ஜாதிக ஹெல உறுமய, இராணுவ ஆட்சி ஒன்றையே விரும்புவதாக குமார சுட்டிக்காட்டியுள்ளார்