சட்டவிரோத ஆட்கடத்தலின் பின்னணியில் கோத்தபாய

  சட்டவிரோதமான ஆட்கடத்தலின் பின்னணியில் கோத்தபாய ராஜபக்ஷ இருந்துள்ளமை தற்போது அம்பலமாகியுள்ளது.  சிறிலங்காவிலிருந்து அவுஸ்திரேலியாவி...

download
 சட்டவிரோதமான ஆட்கடத்தலின் பின்னணியில் கோத்தபாய ராஜபக்ஷ இருந்துள்ளமை தற்போது அம்பலமாகியுள்ளது.
 சிறிலங்காவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை கடத்துவது பணியில் கடற்படையினர் ஈடுபட்டமை விசாரணைகள் மூலம் தெரிவித்துள்ளத.
 சிறிலங்கா இராணுவபுலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹென்தவிதாரண, கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தார் என்பது விசாரணைகளின் மூலமாக அம்பலமாகியுள்ளது.
 இந்த நடவடிக்கை பொறுப்பாக செயற்பட்டவர் கடல் புலனாய்வு பிரிவின் அதிகாரி கே .சி வெலெகெதர என்பதும் தெரியவந்துள்ளது. அவர் தற்போது நாட்டை விட்டு வெளியேற முயல்வதாகவும், அவரிற்கு அவுஸ்திரேலிய தூதரகம் விசா வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2012 முதல் 2013ம் ஆண்டு வரை அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை கடத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுமார் 120 படகுகள் புறப்பட்டுச் சென்றுள்ளன. ஒரு படகில் சுமார் 100 முதல் 150 பேர்வரை பயணம் செய்துள்ளனர்.அனேகமானவர்கள் தமிழர்கள் என்பதுடன் அவர்கள் தலா ஒரு மில்லியனை வழங்கியுள்ளனர்.
 கடற்படையினரிடம் செய்து கொண்ட ஒப்பந்த அடிப்படையில் மூன்று படகுகளை சாதாரண படகோட்டிகள் செலுத்தியுள்ளனர்.
 இதன்மூலம் கபில ஹென்தவிதாரண, கடற்படை புலனாய்வு பிரிவின் தலைவர் நிசாந்த உலுகெட்டென்ன, அவருக்கு அடுத்த நிலையிலுள்ள பிரசன்ன ஹேவகே, கே .சி வெலெகெதர ஆகியோர் இதன் மூலமாக 130 மில்லியன் வரை பணம் சம்பாதித்துள்ளனர்.
 தங்களுடைய தலைமை அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பது தெரியாத கடற்படையினர் 63 மேற்பட்ட படகுகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். உஸ்வெட்டகெய்யாவ முகாமை சேர்ந்த லெப் ஜெயக்கொடி 2012 இல் நீர்கொழும்பிலிருந்து புறப்படவிருந்த 5 படகுகளை தடுத்து நிறுத்தியுள்ளார். அதற்காக அவர் பின்னர் கண்டிக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
 கடற்படையில் இந்த ஆள்கடத்தல் கும்பல்கள் அதிக செல்வாக்குடன் விளங்கியதன் காரணமாக படகுகளை தடுத்து நிறுத்திய அதிகாரிகளை அவர்கள் ஒரிருநாட்களிற்குள் இடமாற்றம் செய்தனர்.
 கடற்படை தளபதிக்கு இது குறித்து தெரிந்திருந்தாலும் அவரும் அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. கபில ஹென்டவிதாரணவிற்கும் கோத்தபாயவிற்குமான தொடர்புகள் குறித்து அவர்கள் அறிந்திருந்ததே இதற்கு காரணம்.

Related

இலங்கை 650972518822327435

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item