மைத்திரி – ரணிலின் கூட்டணியின் பின்னணியில் அமெரிக்கா! !
சிறிலங்காவின் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதை ராஜங்க செயலாளர் ஜோன் கெரி சூட்சுமமான முறையில் தெரிவித்துள்ளார். ...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_585.html
சிறிலங்காவின் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதை ராஜங்க செயலாளர் ஜோன் கெரி சூட்சுமமான முறையில் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு முன்பாக உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
2016ம் நிதியாண்டுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் வரவு செலவுத் திட்டம் தொடர்பாக உரையாற்றினார்.
அதில் இதுவரை ஜனநாயகம் இல்லாத, பிரச்சினைக்குரிய பல இடங்களில், ஜனநாயகத்தை இப்போது காண முடிகிறது.
சிறிலங்காவிலும், ஏனைய நாடுகளிலும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தப் பட்டியலைத் தொடரமுடியும்.
மாற்றங்களை ஏற்படுத்தும் மகத்தான வாய்ப்புகளுக்காக நாம் எமது பணிகளை ஆற்ற வேண்டும்.
இதனைத் தொடர்ந்து உறுதியாக முன்னெடுப்பதற்கு, மாற்றங்களை ஏற்படுத்துவதற்குத் தேவையான வளங்கள், ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்கச் செயலரின் இந்தக் கருத்து, சிறிலங்காவின் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னணியில் அமெரிக்கா இருந்திருப்பதான கருத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate