ஈராக்கின் மீதான தாக்குதலில் பிரெஞ்சுப் போர்க்கப்பல்!! (காணொளி)
பிரான்சின் மீதான ISIS இன் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஐளுஐளு இற்கு எதிராகப் பேராடும் பிரெஞ்சுப் படையினர்க்கு வலுச் சேர்க்கப் பிரான்ச...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_692.html
பிரான்சின் மீதான ISIS இன் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஐளுஐளு இற்கு எதிராகப் பேராடும் பிரெஞ்சுப் படையினர்க்கு வலுச் சேர்க்கப் பிரான்சின் மிகப்பெரிய அணுசக்திப் போர்க்கப்பலான சார்ல்-து-கோல் (Charles-de-Gaulle) போர் விமானங்களுடன் புறப்பட்டிருந்ததை வாசகர்கள் அறிவீர்கள். இன்று இந்தக் கப்பலில் இருந்து புறப்பட்ட இரண்டு RAFALE விமானங்கள் ஈராக்கிலுள்ள ISIS இன் நிலைகள் மீது தாக்குதலை நடாத்திக் குண்டு வீசி விட்டு வெற்றிகரமாகத் திரும்பியுள்ளன.
சமால் (Chammal) நடவடிக்கை எனப்படும் இஸ்லாமிய தேசப் பயங்கரவாதத்திற்கெதிரான தாக்குதலிலேயே போர்க்கப்பலில் இருந்து புறப்பட்ட பிரெஞ்சுப் போர் விமானங்கள் இன்று தாக்குதலை நடாத்தி உள்ளன. சிரிய எல்லைப் பகுதிக்கு அருகில் உள்ள Al Quaim பிராந்தியத்தில் அமைந்துள்ள ISIS இன் இரண்டு பயிற்சி முகாம்கள் இத்தாக்குதலில், முற்றாக அழிக்கப்பட்டுள்ளன எனப் பிரான்சின் பாதுகாப்பமைச்சர் தெரிவித்துள்ளார்.
லேசர் மற்றும் GPS வழிகாட்டியுடனான ஏவுகணைகளைத் தாங்கியபடி புறப்பட்ட நான்கு RAFALE போர்விமானங்கள் இந்தத் தாக்குதலிற்காகப் புறப்பட்டன. அதில் இரண்டு விமானங்கள் கண்காணிப்பையும் படப்பிடிப்பையும் மேற்கொள்ள மற்றைய இரண்டு விமானங்களும் தாக்குதலை நடாத்தி உள்ளன.
இந்த விமானம் தாங்கிப் போர்க்கப்பலில் 12 RAFALE போர் விமானங்களும், 9 நவீன மயப்படுத்தப்பட்ட Super Étendard போர் விமானங்களும், நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தப் போர்க்கப்பல் களமுனைக்குச் சென்றிருப்பதன் மூலம், இந்தப் போர்க்களத்தில் பிரெஞ்சுப் படைகளின் சக்தி இரட்டிப்பாகி உள்ளது.
இந்தப் பேர்க்கப்பலில் பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் ஈல் லூதுரியான் அவர்களும் பயணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கப்பலில் இருந்து புறப்ட்டு இந்தியாவைப் பாதுகாப்பமைச்சர் அடைவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate