பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிற்கு வாக்குமூலமளித்துள்ளார் டிரான் அலஸ்
பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் இன்று பிற்பகல் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிற்கு சென்று வாக்குமூலம் வழங்கியுள்ளார். பாராளுமன்ற உறுப்ப...


ராடா நிறுவனத்தின் வீடமைப்புத்திட்டம் தொடர்பில் சில பிரச்சினைகள் எழுந்துள்ளதாக அறிந்திருப்பீர்கள். அது தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே இன்று அழைக்கப்பட்டிருந்தேன். நான் அன்றும் இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கூறியிருந்தேன். அமைச்சர் சம்பிக்க ரணவக்கவே எனக்கு எதிராக செயற்படுகின்றார். ஊழலுக்கு எதிரான முன்னணி என்ற பெயரில், பொலிஸ் மாஅதிபரிடம் முறைப்பாடொன்று சமர்ப்பிக்கப்பட்டு அதன் விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனக்கு எதிராக தனிப்பட்ட முறையில் சேறுபூசும் நோக்கிலும் பழிவாங்கும் நோக்கிலும் இதனை செய்கின்றார்.