விமானி உயிரோடு எரித்துக் கொலை- ஐ.எஸ்.க்கு பதிலடியாக இரு தீவிரவாதிகளைதூக்கிலிட்டது ஜோர்டான்!!
[caption id="" align="aligncenter" width="418"] ஜோர்டானிய விமானி முவாத் கசாஸ்பே[/caption]...


பிணைக் கைதியாக பிடித்து வைத்த ஜோர்டான் நாட்டு விமானியை உயிருடன் எரித்தது தொடர்பான வீடியோவை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டு உலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தங்கள் நாட்டு சிறையில் இருந்த பெண் தீவிரவாதி உட்பட இருவரை இன்று தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றியுள்ளதாக ஜோர்டான் அரசு அறிவித்துள்ளது.
ஜோர்டான் நாட்டை சேர்ந்த விமானி முயாத் அல் கசாஸ்பெ, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் கடந்த டிசம்பர் மாதம் 24-ந் தேதி பிடிபட்டார். கடந்த டிசம்பர் மாதம் சிரியாவின் ரக்கா நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் மீது குண்டு வீசிய போது அவரது எப்-6 ரக விமானம் தரையில் விழுந்தது. அதில் இருந்து உயிருடன் தப்பிய அவரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சிறை பிடித்து பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்தனர். இதனையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பிணைக் கைதியாக இருந்த அல் கசாஸ்பெயை விடுவிக்குமாறு கோரிக்கை எழுந்தது. இதேபோல் ஜப்பானைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கெஞ்சி கோட்டோவையும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சிறைபிடித்து வைத்திருந்தனர். ஜோர்டான் விமானிலை விடுவிக்க வேண்டுமெனில் அந்நாட்டு சிறையில் உள்ள ஈராக் பெண் தீவிரவாதி சஜிதா அல் ரிஷாவியை விடுதலை செய்ய வேண்டும் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கெடு விதித்தனர். விமானி அல்கசாஸ்பெ உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை தரும்படி தீவிரவாதிகளிடம் ஜோர்டான் அரசு கேட்டது.
அல்கசாஸ்பெ உயிருடன் இருப்பதை உறுதிசெய்தால் பெண் தீவிரவாதியை ஒப்படைத்து விடுகிறோம் என்று ஜோர்டான் அரசு கூறியது. இதனிடையே ஜப்பான் பிணைக் கைதி கோட்டோ உட்பட இருவரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தலையை வெட்டி படுகொலை செய்தனர். ஆனால், ஜோர்டான் விமானி அல்கசாஸ்பெ குறித்து எந்த தகவலும் தெரியவரவில்லை. விமானி உயிருடன் இருக்கிறாரா? என்பதற்கான ஆதாரத்திகாக காத்திருப்பதாகவும் ஜோர்டான் அறிவித்துள்ளது. இந்நிலையில் தீவிரவாதிகள் விமானி முயாத் அல்கசாஸ்பெவை கூண்டில் அடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றுள்ளனர். அந்த வீடியோவை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். விமானி முயாத் அல் கசாஸ்பெக்கு ஆரஞ்சு நிறஉடை அணிவிக்கப்பட்டுள்ளது. அவரை சுற்றிலும் முகத்தை மூடிக்கொண்ட ஆயுதம் தாங்கிய ஐ.எஸ். தீவிரவாதிகள் நிற்கின்றனர். தீவிரவாதிகள் முயாத் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து உயிருடன் எரிக்கும் சம்பவம் வீடியோவில் பதிவாகியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் இந்த கொடூரச் செயல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஜப்பான் நாட்டை சேர்ந்த இருவரை, ஐ.எஸ். தீவிரவாதிகள் தலை துண்டித்து கொன்றது குறிப்பிடத்தக்கதாகும்.
சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான சர்வதேச நாடுகளின் கூட்டு தாக்குதலில் செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், பக்ரைன் ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளது. ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், கனடா, டென்மார்க் பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. ஜோர்டான் பதிலடி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் வெறிச்செயலுக்கு பதிலடியாக தங்களது நாட்டு சிறையில் இருந்த சஜிதா உட்பட இரு தீவிரவாதிகளை இன்று தூக்கிலிட்டுவிட்டதாக ஜோர்டான் அரசு அறிவித்துள்ளது. இத்தகவலை அந்நாட்டு அரசு செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 5 ஆயிரம் வெளிநாட்டு தீவிரவாதிகள்? இதனிடையே ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சுமார் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையிலான வெளிநாட்டு தீவிரவாதிகள் இணைந்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்கா அதிகரிகள், சிரியாவில் அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சியாளர்களின் எண்ணிக்கையானது ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒப்பிடுகையில் குறைவுதான். 5 மாதங்களுக்கு முன்பு ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்காவும் நேச நாடுகளும் தாக்குதல் நடத்த தொடங்கின. மொத்தம் 6 ஆயிரம் தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம். அதே நேரத்தில் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வெளிநாட்டு தீவிரவாதிகள் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. ஐ.எஸ். இயக்கத்தின் இந்த ஆட்சேர்ப்பை தடுக்க முடியவில்லை. அத்துடன் ஈராக் மற்றும் சிரியா நாட்டைச் சேர்ந்த இளைஞர்களும் பெருமளவில் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்திருப்பது கவலை தரக்கூடியதாக இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து ஐ.எஸ். இயக்கத்தில் இணையவருவோரை தடுக்காமல் விட்டால் இந்த யுத்தம் முடிவற்றதாக தொடர் கதையாகி விடும் என்றும் கூறியுள்ளனர்.