இலங்கையின் 67வது சுதந்திர தின இஸ்லாமிய நிகழ்வு
இலங்கையின் 67வது சுதந்திர தின இஸ்லாமிய நிகழ்வு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பு மருதானை ஜூம்ஆ பள்ளிவாசலில் ம...

பிரதம அதிதியாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் திணைக்கள அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் இதில் கலந்து கொண்டார். விசேட அதிதிகளாக அமைச்சின் செயலாளர் அப்துல் மஜீத், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.பௌசி, முத்தலிப்பாவா பாறுக், முஹமட் அஸ்லம், பலஸ்தீன தூதுவர் ஸூஹைர் எம்.எச்.தார்சைத் மற்றும் அரச உயரதிகாரிகள், உலமாக்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் என பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.
மருதானை ஜூம்ஆ பள்ளிவாசல் பிரதம இமாம் எம்.ஏ.எம்.முர்ஸித்; மற்றும் மௌலவி பைஸல் காரி ஆகியோர் நாட்டின் சமாதானத்திற்காகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஆசி வேண்டி விசேட துஆ பிராhத்தனை நடாத்தினார்.
