புதிய காத்தான்குடி ; மக்கள் ஆர்ப்பாட்டம்
புதிய காத்தான்குடி பாம் வீதியை புணருத்தாரணம் செய்து சீரானமுறையில் அமைத்துத்தர வேண்டும் எனக்கோரி அப்பகுதி மக்கள் பாரியஆர்ப்பாட்டம்...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_0.html
புதிய காத்தான்குடி பாம்
வீதியை புணருத்தாரணம் செய்து சீரானமுறையில் அமைத்துத்தர வேண்டும் எனக்கோரி
அப்பகுதி மக்கள் பாரியஆர்ப்பாட்டம் ஒன்றில் இன்று ஈடுபட்டனர்.
பாம் வீதி மனாருல் ஹுதா பள்ளிவாயல் முன்றலிலிருந்து பொதுமக்கள் பதாதைகளை
ஏந்தியவர்களாக பேரணியாக
டெலிகொம் வீதிவரை சென்றனர்.
இந்த வீதி தொடர்பில் முன்னாள்
பிரதிமைச்சர் MLAM.ஹிஸ்புல்லாஹ்
அவர்களைச் சந்தித்தவேளையில்
‘இவ்வீதியினை புணருத்தாரணம்
செய்வதற்காக நிதி ஒதுக்கப்பட்டு கல்முனை தனியார் கம்பனி ஒன்றிடம்
ஒப்படைத்திருந்ததாகவும் ஆனால் அதற்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக்
தடையாக இருப்பதாகவும்’
பிரதியமைச்சர் தெரிவித்ததாக
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட
பொதுமக்கள் குறிப்பிட்டனர்.
இந்நிலையில் அங்கு வந்த
கிழக்கு மாகாணசபை உறுப்பினர்
ஷிப்லி பாரூக், இந்த
வீதி புணருத்தாரணத்தை நிறுத்துவதற்கோ அல்லது அவர்களை அச்சுறுத்துவது தொடர்பில்
“மகநெகும” தனியார் நிறுவனத்திடம் எந்தவிதமான அறிவுறுத்தல்களிலும்
ஈடுபடவில்லை’ எனவும் ‘தன் மீது வீண் அபாண்டம் சுமத்தப்படுவதாகவும்,
இது தொடர்பில் அவர் பொலிசில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்யவுள்ளதாகவும்’
தெரிவித்தார்.
அத்துடன் மேற்படி புணருத்தாரண
வேலைத்திட்டத்துக்கு 110
கோடி ரூபா பொய்யான விடயம் எனவும் 65 கோடியே ஒதுக்கப்பட்டது எனவும்
பொய் சொல்லி பித்தலாட்டம்
செய்து களவெடுத்து அரசியல்
செய்யவேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை’ என
கூறியபோது அங்கிருந்த பொதுமக்கள் இது நிரூபணமானால் உடனடியாக
மாகாணசபை பதிவியிலிருந்து இராஜினாமா செய்ய
வேண்டும் என வலிறுத்தினர்.
இதனை ஏற்றுக்கொண்ட
மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாரூக், அவ்வாறு நிரூபித்தால் தான்
அரசியலிலிருந்து ஒதுங்கிக்
கொள்வதாகாவும் குறிப்பிட்டார்.’
இதேவேளை ‘தனக்கும் இதற்கும்
எவ்விதமான தொடர்புகளும் இல்லை, இதற்கான எந்தவிதமான ஆவணங்களும் கூட
என்னிடமில்லை, முன்னாள்
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும்,
மாகாணசபை உறுப்பினர்
ஷிப்லி பாரூகும் தான் இந்த
வீதி புணருத்தாரண வேளைகளில் ஈடுபட்டு வந்தனர், ஆனால் எனக்கு மக்கள்
பலமுறை இந்த வீதி தொடர்பில்
முறைப்பாடுகளை செய்து வந்த
நிலையில் இதனை விரைவாக
செய்து முடிப்பதற்கான அழுத்தங்களைக்
கொடுத்துவந்தேன்’ என
காத்தான்குடி நகரசபைத் தவிசாளர்SHM.அஸ்பர்
இங்கு உரையாற்றும்போது தெரிவித்தார்.
இதன்போது நல்லாட்சிக்கான
தேசிய முன்னணியின் தவிசாளர்
பொறியியலாளர்MM.அப்துல்
ரஹ்மான் இங்கு உரையாற்றும்போது ‘இந்த
வீதி புணருத்தாரண
வேளைகளில்
மூன்று பேர் நேரடியாகச்
சம்பந்தப்பட்டிருப்பது தெளிவாகத்தெரிகிறது, இவர்கள் மூவரையும் ஒன்றாக
வைத்து பேசினால்தான் இதன்
உண்மை நிலையினைக் கண்டறிய முடியும், இவ்வாறு பரஸ்பரம்குற்றச்சாட்டுக்களை
முன்வைக்காது உரிய
முறையில் மக்கள் பயன்
பெறக்கூடியவாறு உடனடியாக இந்த வீதியை புணருத்தானம் செய்வதற்கான
வேலைகளைச் செய்யவேண்டும். இவற்றின் பொது மக்கள் பாதிக்கப்படக்கூடாது,
இதற்கான தெளிவான
முடிவு ஒன்றிற்கு வரவேண்டும்.’ எனகுறிப்பிட்டார்.
இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்ட
நடவடிக்கை இடம்பெறும்
இடத்திற்கு வருகை தந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான
ULMN.முபீன், ‘முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் வாரம் நெடுச்சாலைகள்
அமைச்சர் கபீர் ஹஸீமை சந்திக்கவிருக்கும்
நிலையில் இந்த வீதி விடயமாகவும்,
இதற்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாகவும் கலந்துரையாட
என்னியுள்ளதாக’தெரிவித்தார்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில்
கலந்துகொண்ட பொதுமக்கள் இந்தப் பகுதி பள்ளிவாயல் நிருவாகிகள் இருவரை அழைத்துச்
செல்ல வேண்டும்
என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதையடுத்து அதனையும் முன்னாள் மாகாணசபை
உறுப்பினர் முபீன்
ஏற்றுக்கொண்டார்.

