உறக்கத்திலும் மஹிந்த, மஹிந்த என பிதற்றுகின்றனர்: பிரதி சபாநாயகர்
ஜே.வி.பி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் உறக்கத்திலும் மஹிந்த மஹிந்த என பிதற்றுவதாக முன்னாள் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெ...


ஜே.வி.பி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் உறக்கத்திலும் மஹிந்த மஹிந்த என பிதற்றுவதாக முன்னாள் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் முடிவடைந்து வீடு சென்று உறங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 2, 3 மணிக்கு கனவில் பயந்து சத்தமிடுகின்றனர். என்ன என்று விசாரித்து பார்த்தால் இவர்களுக்கு மஹிந்த பீதி ஏற்பட்டுள்ளது.
மஹிந்த தேர்தலில் போட்டியிடுவதனால் ஜே.வி.பி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.
மஹிந்தவே இந்த நாட்டின் தலைவராக இருக்க வேண்டும் என்பதனை இவர்களும் அறிவார்கள்.இவர்களின் நோய் எதிர்வரும் 18ம் திகதி காலை சுகமடைந்துவிடும்.
ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிட்டு தோதலில் வெற்றியீட்ட உத்தேசித்திருந்தது.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலைமை ஏற்பட்டுள்ளது என யக்கலமுல்ல பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.