கண்டி மாவட்டத்தில் UNPயில் 3 முஸ்லிம்கள்….
ஐக்கிய தேசிய கட்சியில் கண்டி மாவட்டத்தில் 3 முஸ்லிம்கள் போட்டியிட வேண்டும்…இல்லாவிடின் ரிவோட்ஸ் அமைப்பு தீர்க்கமான முடிவொன்றை எடுக்க நே...

http://kandyskynews.blogspot.com/2015/07/unp-3.html

தொடர்ச்சியாக மாகாண சபை,ஜனாதிபதி தேர்தல்களில் கண்டி மாவட்ட பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்களோடு இணைந்து மிகத்தீவிரமாக ஐக்கிய தேசியக் கட்சியுடைய வெற்றியிலே பங்காற்றினர்.
ரிவோட்ஸ் உட்பட 132 சமூக சேவை அமைப்புக்கள்,வாலிப சங்கங்கள்,கிராம அபிவிருத்தி குழுக்கள் எம்மோடு கரம்கோர்துள்ள நிலையில் இன்னும் அதிகமான சமூக சேவை அமைப்புக்கள் உடைய ஆலோசனைகள் ஒத்தாசைகளை வழங்குவோம் என வாக்குறுதி அளித்துள்ளனர்.
குறிப்பாக கண்டி மாவட்டத்தில் தொடர்சியாக ஏமாற்றி வாக்குகளை கொள்ளை இடும் ரவுப் ஹகீம்,பைசர் முஸ்தபா,ஆகியோருடைய ஏமாற்றங்களை கண்டி வால் மக்கள் இன்னும் மறக்கவில்லை.
இப்படியான ஒரு தருணத்தில் ஏமாற்றியது மட்டுமல்ல,முஸ்லிம்களுடைய விரோதியான மகிந்த ராஜபக்சவோடு இணைந்து அமைச்சுப்பதவிகளை பெற்று சுகம் அனுபவித்தனர். காதர்,ஹகீம் ஐக்கிய தேசியக் கட்சி வாக்குகளைப் பெற்று ஐக்கிய தேசியக்கட்சிக்கே ஆப்படித்தனர்.மகிந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைக்கும் போது வாய்மூடி மௌனமாக இருந்தனர்.
அப்போது பேசாத இவர்கள் இனியும் பேசுவார்களா ??????????
தொடர்ச்சியாக கண்டி மக்கள் அரசியல் கட்சிகளால் ஏமாற்ற பட்டு உள்ளனர்.எது எவ்வாறாக இருந்த போதும் இனி கண்டி மக்களை ஏமாற்ற முடியாது.
வரலாறுகளில் ௪முஸ்லிம்கல் கண்டி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இடம் பிடித்துள்ளனர்.கடைசியாக நடை பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியில் 3 முஸ்லிம்களும்,ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 1 முஸ்லிமும் தெரிவு செய்யபட்டனர்.
ஆனால் கவலைக்கு இடமான தகவல் என்னவென்றால் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருக்கும் இவ்வாறான நிலைமையில் அதன் வெற்றி பங்கு தாரர்களை மறந்து விட்டது.கடைசி தருவாயில் தனது லாபத்துக்காக ,கட்சியை பாதுகாக்க வந்தவர்களை தலையில் வைத்து கொண்டு இருக்கிறது.
ஐக்கிய தேசிய கட்சி வழமை போல் அதனுடைய ஆட்சியை அமைத்ததும் மீண்டும் ஒரு முறை வரலாற்றில் செய்த அதே தவரை மீண்டும் ஒரு தடவை செய்துவிடுமோ என்ற பயம் சகல முஸ்லிம்களிடமும் இருக்கிறது.
எது எவ்வாறாக இருந்தாலும் கண்டி மாவட்டத்தில் 575௦௦ விருப்பு வாக்குகளை பெற்ற ஆசாத் சாலி,47௦௦௦ வாக்குகளை பெற்ற லாபிர் ஹாஜி ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ரம்பை,கரிவேபிலதாணா???????????
ஏன் இவர்களுக்கு கண்டி மாவட்டத்தில் வாய்ப்பு மறுக்க படுகிறது,இது யாருடைய சதி?????
நிச்சயம் கண்டி மாவட்டத்தில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்காத பட்சத்தில் ரிவோட்ஸ் கடுமையான முடிவு ஒன்றை எடுக்க நேரிடும் என அமைப்பின் பொது செயலாளர் நுஸ்கி நஸீர் தெரிவித்தார்.
அந்த முடிவானது கண்டி வரலாற்றில் பதிவாகும் முடிவாக அமையும் என்ற விடயத்தை விமர்சிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மாகாண சபை தேர்தலிலே 7 பேர் தேவை இல்லை என்று சொன்ன பொது காதில் வாங்காமல் செயற்பட்ட ஐக்கிய தேசிய கட்சி இந்த தேர்தலில் முடிவுகளை ஆராய்ந்து எடுக்கவேண்டும் இல்லையேல் எதிர்காலம் ? என பொது செயலாளர் நுஸ்கி நஸீர் தெரிவித்தார்.