கொழும்பில் நிலத்திற்கு கீழ் இரகசிய முகாம்’ முஸ்லிம்களும் தடுத்து வைப்பு

கொழும்பு சைத்­திய வீதியில் ‘புட்டு பம்பு’ எனும் பெய­ரிலும் திரு­கோ­ண­மலை கடற்­படைத் தளத்தின் இலங்கை கடல் மற்றும் சமுத்­தி­ர­வியல் விஞ்­ஞான ...


கொழும்பு சைத்­திய வீதியில் ‘புட்டு பம்பு’ எனும் பெய­ரிலும் திரு­கோ­ண­மலை கடற்­படைத் தளத்தின் இலங்கை கடல் மற்றும் சமுத்­தி­ர­வியல் விஞ்­ஞான பீட வளா­கத்தில் நிலத்­துக்கு கீழ் ‘கன்சைட்’ எனும் பெய­ரிலும் கடற்­ப­டையின் இர­க­சிய தடுப்பு முகாம்கள் இருந்­துள்­ளமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

புலிகள் இயக்க சந்­தேக நபர்­களை தடுத்து வைப்­ப­தாக குறிப்­பிட்டே இந்த இர­க­சிய முகாம்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் அந்த முகாம்­களில் கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பிர­தே­சங்­களில் வைத்து கடத்­தப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­துள்­ள­மைக்­கான ஆதா­ரங்கள் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு கிடைத்­துள்­ளன.

முன்னாள் கடற்­படை தள­பதி அட்மிரல் வசந்த கரன்­னா­கொட தனது பாது­காப்பு அதி­கா­ரி­யான லெப்­டினன் கொமாண்டர் சம்பத் முன­சிங்­க­வுக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்­பாட்டின் கீழ் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் கூட்டு கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவே இந்த தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதற்­க­மைய கடந்த 2008.09.17 அன்று இரவு தெஹி­வளை, பெர்னாண்டோ மாவத்­தையில் வைத்து ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன்இ தில­கேஷ்­வரம் ராம­லிங்கம், மொஹம்மட் நிலான், மொஹம்மட் சாஜித் ஆகிய மாண­வர்­களும், கொட்­டாஞ்­சேனையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், மன்னார் அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன்இ ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆரச்சி, திரு­கோ­ண­ம­லையைச் சேர்ந்த கண­க­ராஜா ஜெகன், தெஹி­வ­ளையைச் சேர்ந்த மொஹம்மட் அலி அன்வர் ஆகிய 11 பேருமே இவ்­வாறு கடத்­தப்­பட்டு கொழும்பு சைத்­திய வீதியில் உள்ள புட்டு பம்பு எனும் ரக­சிய தடுப்பு இடத்­திலும் திரு­கோ­ண­மலை கடற்­படை தளத்தின் கன்சைட் எனும் இர­க­சிய நிலத்­தடி சிறைக் கூடத்­திலும் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­துள்­ள­மைக்­கான சான்­றுகள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந் நிலையில் கோட்டை நீதிவான் நீதி­மன்றில் விசேட அனு­மதி ஒன்­றினைப் பெற்­றுக்­கொண்டு புல­னாய்வுப் பிரிவின் கூட்டு கொள்­ளைகள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டி சில்­வா­த­ல­மை­யி­லான குழு இவ்­விரு ரக­சிய தடுப்பு முகாம்­க­ளையும் ஆய்வு செய்­துள்­ள­துடன் தற்­போதும் திரு­கோ­ண­மலை கடற்­படை தளத்தில் உள்ள நிலத்­தடி சிறைக் கூடங்­களை உள்­ள­டக்­கிய குறித்த கன்சைட் எனப்­படும் இர­க­சிய இடத்­துக்கு சீல் வைத்து மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளது.

குறித்த பெயரில் இர­க­சிய தடுப்பு முகாம்­களை நடத்திச் சென்­றமை தொடர்பில் அப்­போ­தைய திரு­கோ­ன­மலை கடற்­ப­டையின் கட்­டளை தள­ப­தியும் தற்­போ­தைய கடற்­படை தலை­மை­யக விநி­யோக பிரிவு பணிப்பாளராக கடமையாற்றுபவருமான கொமான்டர் கஸ்ஸப கோத்தாபய போல் உள்ளிட்ட 22 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சாட்சியமளித்துள்ள நிலையில் அது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதிவான் பிரியந்த லியனகேவுக்கும் அறிக்கை சமர்பித்துள்ளனர்.

Related

தலைப்பு செய்தி 4666405732690724868

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item