சம்பந்தன் உள்ளிட்ட நான்கு வேட்பாளர்களுக்கு விசேட சலுகை வழங்கும் மஹிந்த
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான இரா.சம்பந்தன் உள்ளிட்ட நான்கு வேட்பாளர்களுக்க...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_220.html

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான இரா.சம்பந்தன் உள்ளிட்ட நான்கு வேட்பாளர்களுக்கு, தேர்தல்கள் ஆணையாளர் விசேட சலுகைகளை வழங்கியுள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களுக்கு இவ்வாறு தேர்தல்கள் ஆணையாளர் விசேட சலுகை வழங்கியுள்ளார்.
அரசியல் அமைப்புப் பேரவையின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு விசேட வரப்பிரசாதங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனங்கள், பாதுகாப்பு ஆகியனவற்றை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உள்ளிட்டவர்களைத் தவிர்ந்த ஏனைய வேட்பாளர்களுக்கு பாதுகாப்போ வாகனங்களோ வழங்கப்படவில்லை.
எனினும் அரசியல் அமைப்பு பேரவையின் தலைவர், உறுப்பினர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட உள்ளது.
பேரவையின் தலைவர் சமல் ராஜபக்ச, உறுப்பினர்களான சம்பந்தன், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனவிரட்ன ஆகியோருக்கு பாதுகாப்பு மற்றும் வாகனங்கள் வழங்கப்பட உள்ளது.