ஜோர்டான் போர் விமான தாக்குதலில் அமெரிக்க பெண் பிணைக்கைதி பலி?
சிரியா மற்றும் ஈராக் பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ்.தீவிரவாதிகள் இஸ்லாமிய நாடாக் அறிவித்துள்ளனர்.அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டினரை பிணைக் கைதிகளாக ...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_95.html

இவரை சிரியாவின் ரக்கா நகரில் ஒரு கட்டிடத்தில் அடைத்து வைத்திருந்தனர். சமீபத்தில் ஜோர்டான் பிணைக் கைதி விமானி முயாத் அல் - காசெஸ்பேயை கூண்டுக்குள் அடைத்து உயிருடன் தீ வைத்து எரித்து கொன்றனர்.அதற்கு பழிவாங்க ஜோர்டான் சிரியாவில் உள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகள் நிலைகள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் அமெரிக்க பெண் பிணைக்கைதி காய்லா ஜீன் முயல்லர் பலியான தாக தீவிரவாதிகள் தெரிவித் துள்ளனர்.
ஜோர்டான் போர் விமானங்கள் தவறுதலாக குண்டு வீசியதில் ரக்கா நகரில் கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்தன. அந்த இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்து விட்டார். ஆனால் அதில் தீவிரவாதிகள் யாரும் உயிரிழக்கவில்லை. காயம் அடையவும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் அவர்களது இணைய தளத்தில் வெளியி டப்பட்டுள்ளது. அமெரிக் காவை சேர்ந்த இவர் ஒருவர் மட்டுமே ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிடியில் பிணைக் கைதியாக இருந்தார். இவர் அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர். கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காதலருடன் சிரியாவில் பணியில் இருந்த போது இவரை தீவிரவாதிகள் பிடித்து சென்று பிணைக் கைதி ஆக வைத்தி ருந்தனர்.
ஆனால் இதை அமெரிக்கா மறுத்துள்ளது. ஜோர்டான் குண்டு வீச்சில் காய்லா ஜீன் முயல்லர் அடைத்து வைக்கப்பட்டிருந்த கட்டிடம் இடிந்து தரை மட்டம் ஆனதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.