நாட்டின் தேசிய வருமானத்தில் 81 வீதம் ராஜபக்ஷ குடும்பத்தின் வசமே இருந்தது! - சம்பிக்க

நாட்டின்   தேசிய வருமானம் 700 பில்லியனாக இருந்தபோதும் அதில் 19 வீதத்தை தவிர ஏனையவற்றை ராஜபக்ஷ குடும்பமே நிர்வகித்தது என அமைச்சர் சம்பிக்க ...










download (2)

நாட்டின்   தேசிய வருமானம் 700 பில்லியனாக இருந்தபோதும் அதில் 19 வீதத்தை தவிர ஏனையவற்றை ராஜபக்ஷ குடும்பமே நிர்வகித்தது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் முழு வரி வருமானத்தையும் மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ என ஒரு குடும்பமே நிர்வகித்தது.
உலகில் இந்தளவு மோசமான நிர்வாகம் வேறெந்த நாட்டிலும் இருந்ததில்லை. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் 2000 முறைப்பாடுகள் அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ளன. இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். கடந்த ஐந்து வருட காலத்தில் எந்த சட்ட திட்டங்களும் மதிக்கப்படாமல் ஊழல் மோசடிகள் பெருமளவில் இடம்பெற்றுள்ளன. நாட்டின் தேசிய வருமானத்தில் பெருமளவு பகுதியை ராஜபக்ஷ குடும்பமே நிர்வகித்துள்ளது.

எமது ஏற்றுமதித்துறை பாரிய பின்னடைவை அடைந்துள்ளது. மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்படாமல் வரிச் சுமைகள் மக்கள் மீதே சுமத்தப்பட்டன. வெளிநாட்டு கையிருப்பு தொடர்பில் தொடர்ந்தும் மக்களுக்கு பொய்யே கூறப்பட்டு வந்துள்ளது. மத்திய வங்கி அறிக்கைகளும் திரிபுபடுத்தியே வெளியிடப்பட்டுள்ளன. கடன்பெற்ற பணமே வெளிநாட்டுக் கையிருப்பு என காட்டப்பட்டது. 100 ற்கு 8 வீதமான பொருளாதார அபிவிருத்தி எனக் காட்டுவதற்காக சரியான புள்ளி விபரங்கள் திரிபுபடுத்தப்பட்டதையும் குறிப்பிட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Related

மூன்று மணி நேரம் மரத்தில் தொங்கி உயிருக்குப் போராடிய நெதர்லாந்து பிரஜை! (video)

உலக முடிவு என அழைக்கப்படும் அம்பேவலை ஹோட்டன் (Horton) சமவெளி பகுதியில் இருந்து தவறி விழுந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த நபர் மூன்று மணி நேர போராட்டத்தின் பின்னர் காப்பாற்றப்பட்டுள்ளார்.  மனி...

மீண்டும் மஹிந்த! பரபரப்பாகும் கொழும்பு – தீவிர முயற்சியில் பா.உறுப்பினர்கள்

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பாராளுமன்றத்திற் கொண்டு வர தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.   தேசிய பட்டியலின் மூலம் மஹிந்தவை உள்வாங்கும் முயற்சிகள் ...

ஒரு முஸ்லிம் அரசியல்வதியின் நடவடிக்கைகளால் சிங்கள மக்கள் மத்தியில்…..

இனங்களுக்கு இடையே முறுகல் நிலையை தோற்றுவிக்கும் வகையில் ஒரு  அரசியல்வாதியின் செயற்பாடுகள் அமைந்துள்ளது மிகவும் கவலையளிப்பதாக மேல் மாகாண சபை உறுப்பினரும் கொழும்பு மத்தி ஐக்கிய தேசிய கட்சி ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item