தேசிய அரசைக் கவிழ்க்க கோட்டாபயவின் வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் சதித்திட்டம்!

தேசிய அரசைக் கவிழ்க்க கோட்டாபயவின் வீட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சிலர் சதித்திட்டம் தீட்டிய...

தேசிய அரசைக் கவிழ்க்க கோட்டாபயவின் வீட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சிலர் சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என தேசிய நிறைவேற்றுச் சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அஸாத் ஸாலி தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அஸாத் ஸாலி இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

'இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகள் மஹிந்தவுடையதோ அல்லது கோட்டாபயவினுடையதோ அல்ல. அந்தக் காணிகள் தமிழ், முஸ்லிம் மக்களின் சொந்தக் காணிகளாகும். அதை உரிய மக்களிடம் கொடுக்கவேண்டாம் என்று சொல்வதற்கு தினேஷ் குணவர்தனவும் கோட்டாபயவும் யார்? யுத்தக் காலத்தில் பாதுகாப்புத் தேவை கருதியே தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளை இராணுவம் கைப்பற்றியது. இப்போது தினேஷ் குணவர்தனவும், கோட்டாபயவும் அதைக் கொடுக்கவேண்டாம் என்கின்றார்கள்.

மூவின மக்கள் இந்த நாட்டில் ஒன்றாக வாழும் சூழல் உதயமாகியுள்ளது. இந்தச் சூழலைக் கெடுத்து நாட்டில் மீண்டும் இனவாதத்தை விதைத்து சிறுபான்மைச் சமூகத்தை அடக்கியாள தினேஷ் குணவர்தனவும், கோட்டாபயவும் முயல்கின்றனர். அதற்கு இனியொருபோதும் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடமளிக்கமாட்டார்.

கடந்த திங்கட்கிழமை இரவு கோட்டாபயவின் வீட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒருசில முன்னாள் அமைச்சர்கள் ஒன்றுகூடி தேதிய அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவருக்கும் பயப்படக்கூடியவர் அல்லர். இன்று முழு சர்வதேசமே அவரை வரவேற்கின்றது.

தேசிய கீதம் தமிழில் பாடுவது தமிழ் பேசும் மக்களின் உரிமை. அந்த விடயம் 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து காணப்படுகின்றது. தேசிய கீதத்தை தமிழில் பாடக்கூடாது என்று இலங்கை அரசமைப்பில் இல்லையெனத் தெளிவாக ஜனாதிபதியும் அமைச்சர்களும் விலக்கியுள்ளனர். அதற்கு எதிராக வேண்டுமென்றால் விமலும், தினேஷிம், ஞானசார தேரரும் மாத்திரம் இருப்பார்கள். மாறாக, சிங்கள மக்கள் இருக்கமாட்டார்கள். ஏனென்றால், சிங்கள மக்கள் இவர்களை அரசியலிலிருந்து ஒதுக்கியுள்ளனர். இவர்கள் இனவாதத்தை இனி இந்த நாட்டில் விதைக்க முடியாது.

இன்று மஹிந்த ராஜபக்ஷ­வுக்கு பாதுகாப்புக் குறைவாம். முன்னர் இருந்த ஜனாதிபதிகள் பதவிக்காலத்தின் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றனர். ஆனால், மஹிந்த மக்களால் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் 212 பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடனும் 20 இற்கு மேற்பட்ட வாகனங்களுடனும் வாழ்கின்றார். ஆனால், மஹிந்தவுக்குப் பாதுகாப்பு போதாது என்று சிலர் கதை விடுகின்றனர். ஏன் மஹிந்த திருடிய வாகனங்கள் எங்கே? இம்முறை புனித மக்கா பயணத்துக்குக் கூடுதலாக ஆயிரம் பேரை கூட்டிச் செல்ல சவூதி அரசுடன் பேச்சு நடத்தப்படுகின்றது. அத்துடன், மக்கா யாத்திரைக் கட்டணத்தைக் குறைப்பது சம்பந்தமாகவும் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தப்படுகின்றது'' - என்றார்.

Related

இலங்கை 5572999709551419149

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item