சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி - தடுக்க முடியாது என்கிறார் சம்பிக்க!

பாராளுமன்ற விதிமுறைப்படி கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைமைப்பதவி போக வேண்டுமெனின் அதை தடுக்க முடியாது அமைச்சர் சம்பிக்...

பாராளுமன்ற விதிமுறைப்படி கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைமைப்பதவி போக வேண்டுமெனின் அதை தடுக்க முடியாது அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றின் எதிர்க்கட்சியாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆளும் தரப்பாகவுமே கடந்த காலங்களில் செயற்பட்டு வந்தன. எனினும் தற்போது ஏற்பட்டிருக்கும் தேசிய அரசாங்கத்தின் மூலம் எதிர்க்கட்சியினர் யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

யார் எதிர்க்கட்சி என்பதற்கு தேசிய அரசில் விடை கிடைப்பது கடினமானதே. இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்தே தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளன. தேசிய அரசு கலைக்கப்பட்டவுடன் மீண்டும் இரு கட்சிகளில் ஒன்று ஆளும் தரப்பாகவும் எதிர்க்கட்சியாகவும் அமைந்து விடும். ஆனாலும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தேசிய அரசின் ஆட்சியிலும் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சியொன்று அவசியமானதே.

தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்திருப்பதால் பாராளுமன்றில் இவை இரு கட்சிகளுமே ஆளும் தரப்பாகவே நோக்கப்படுகின்றன. எனவே அடுத்த பெரும்பான்மை கட்சிக்கு பாராளுமன்றின் எதிர்க்கட்சி பதவி வழங்கப்பட வேண்டும். அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தகுதியெனின் பாராளுமன்ற விதிமுறைகளுக்கு அமைய சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி பதவி வழங்கப்பட வேண்டுமாயின் அதனை யாராலும் தடுக்கவோ அல்லது எதிர்ப்பு தெரிவிக்கவோ முடியாது.

நாட்டில் ஜனநாயகம் நிலை நாட்ட வேண்டுமெனின் அல்லது சகல மக்களுக்கும் உரிமைகள் சம அளவில் வழங்கப்படுவதெனின் தமிழ் சிங்கள பேதமின்றி உரிமைகள் பகிரப்படுவதே நியாயமானது எனவும் குறிப்பிட்டார்.

Related

இலங்கை 4022985427393923171

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item