கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டின்போது முக்கிய பலர் சமூகமளிக்கவில்லை!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று வெளியிடப்பட்டவேளையில் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் பலர் நிகழ்வில் ப...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_532.html

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று வெளியிடப்பட்டவேளையில் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் பலர் நிகழ்வில் பங்கேற்கவில்லை.
எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, இரத்தினபுரி மாவட்ட கூட்டமைப்பின் தலைவர் ஜோன் செனவிரட்ன, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க உட்பட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.
தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளமையால் அவர்களால் நிகழ்வுக்கு வரமுடியவில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் கட்சி தரப்பு தகவல்படி கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டின்போது பெருமளவான தலைவர்கள் பங்கேற்காமல் இருந்தது. இதுவே முதல்தடவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.