சட்டவிரோத செயல்களுக்கு உதவும் இலங்கை அகதிகளுக்கு எதிராக நடவடிக்கை
சட்டவிரோத செயல்களுக்கு உதவும் இலங்கை அகதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் பொலிஸ் மாஅதிபர் சொக்க...


சட்டவிரோத செயல்களுக்கு உதவும் இலங்கை அகதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் பொலிஸ் மாஅதிபர் சொக்கலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மண்டபம் அகதி முகாமில் உள்ள இலங்கையர்களை நேற்று (13) சந்தித்தபோதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்ததாக இராமேஸ்வரத்தில் உள்ள எமது செய்தியாளர் கூறினார்.
இலங்கை அகதிகள் எதிர்நோக்கிவருகின்ற பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்த தமிழக கடலோர குழுமத்தின் பொலிஸ் மாஅதிபர் அந்தப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
இந்த சந்திப்பில் மத்திய மற்றும் மாநில உளவுப் பிரிவு அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
மண்டபம் அகதி முகாம்களில் சமூக விரோத செயற்பாடுகளும் தேச விரோத செயல்களும் அதிகரித்துள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக தமிழகத்தை சென்றடைவோருக்கு முகாம்களில் அடைக்கலம் வழங்கப்படக்கூடாது என இலங்கை அகதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.