பர்மா: பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் மூவருக்கு சிறைத் தண்டனை
மியன்மாரில் பௌத்த மதத்தை அவமதித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பர்மீயர்கள் இருவருக்கும் நியுசிலாந்து நாட்டவர் ஒருவருக்கும்...

புத்தர் தலையில் ஹெட்ஃபோன் மாட்டியிருக்க வண்ணக்கோலம் அவர் பின்னணியில் தெரிவதாய் உள்ள ஒரு படத்தை இணையத்தில் வெளியிட்டார்கள் என்பதற்காக இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
யாங்கோனில் இரவு விடுதி ஒன்றில் மலிவு விலை பானங்களை விற்பதற்கான விளம்பரத்துக்காக பயன்படுத்தப்பட்டிருந்த இந்தப் படம் மியன்மாரில் இணையத்தில் சட்டென பெருமளவில் பரவியிருந்தது.
நியுசிலாந்து நாட்டவரை சொந்த நாட்டுக்கே திருப்பியனுப்ப அரசாங்கம் தலையிட்டு உதவும் என்று தாம் விரும்புவதாக அவரின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.