இரண்டு பிக்குகளுள் ஒருவரை பிரதமராக்க இரகசிய முயற்சி
சமூக நீதிக்கான அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவே சோபித தேரரை பிரதமராக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் முயற்சித்து வரு...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_772.html
சமூக நீதிக்கான அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவே சோபித தேரரை பிரதமராக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தை கலைக்காது தேர்தல் நடத்தப்படும் வரையில் காபந்து அரசாங்கமொன்றின் கீழ் ஆட்சியை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த காபந்து அரசாங்கத்தின் பிரதமர் பொறுப்பினை மாதுலுவே சோபித தேரருக்கு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிப் பொறுப்பினை கைவிட்டால் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஊடாக மாதுலுவே சோபித தேரரை நாடாளுமன்றிற்குள் கொண்டு வருவதாக சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சோபித தேரர் இதற்கு உடன்படாவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரரை பிரதமராக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.



Sri Lanka Rupee Exchange Rate