தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 16 பேர் கைது
தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டம் மீறப்பட்டமை தொடர்ப...


தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் 23 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட்டமை வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை வாகனங்களில் வேட்பாளர்களின் சுவரொட்டிகள் காட்சிபடுத்தப்பட்டமை தொடர்பில் நேற்று (13) நான்கு முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.