பீல்ட் மார்ஷல் பதவி கோத்தாவுக்கே வழங்க வேண்டும் :பொது பல சேனா
பீல்ட் மார்ஷல் பதவியை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷாவுக்கு தான் வழங்க வேண்டுமென தீவிரவாத அமைப்பான பொது பல சேனாவின்செயலா...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_720.html
பீல்ட் மார்ஷல் பதவியை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷாவுக்கு தான் வழங்க வேண்டுமென தீவிரவாத அமைப்பான பொது பல சேனாவின்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்தெரிவித்துள்ளார்
யுத்த காலகட்டத்தின் போது இராணுவ படைகளுக்கு தலைமை தாங்கி செயற்பட்டதனால் குறித்த பீல்ட் மார்ஷல் பதவி முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கே வழங்கப்பட வேண்டுமென கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்
மேலும் யுத்தத்தை நிறைவு செய்வதற்காக கடமை புரிந்த முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவிற்கும் முன்னாள் விமான படை தளபதி ரோஷான் குணதிலக்கவிற்கும் இவ் சலுகைகள் வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேக்கா பீல்ட் மார்ஷல் பதவியை பெற்றுக்கொள்ளும் நிகழ்வு எதிர்வரும் 22ம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இராணுவத்தின் அதியுயர் பதவியாக பீல்ட் மார்ஷல் பதவி கருதப்படுகின்றதோடு இலங்கையில் பீல்ட் மார்ஷல் தரத்தில் ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது



Sri Lanka Rupee Exchange Rate