பிரதான அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இன்று ஆரம்பம்
பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரதான அரசியல் கட்சிகள் இன்று (14) கன்னி பிரசாரக் கூட்டங்களை முன்னெடுக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான த...


பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரதான அரசியல் கட்சிகள் இன்று (14) கன்னி பிரசாரக் கூட்டங்களை முன்னெடுக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று கண்டியில் இடம்பெறவுள்ளதாக அந்த கட்சியின் பேச்சாளர் அமைச்சர் அகில விராஜ் காரிய வசம் நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மேலும் சில அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மக்கள் விடுதலை முன்னணியும் தமது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை கண்டியில் முன்னெடுக்கின்றது.
கண்டியில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்
இந்த மாதம் 17 ஆம் திகதி அனுராதபுரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாக அந்த கட்சியின் பொதுச்செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெிவித்துள்ளார்.
(newsfirst)